சிகரெட், குடியைவிட மோசமாக செக்ஸூக்கு அடிமையாகும் யூத்!

photoசிகரெட், குடிப்பழக்கத்தைவிட மோசமாக செக்ஸூக்கு, இங்கிலாந்து இளைஞர்கள் அடிமையாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள இளைஞர்கள் சிகரெட், மதுபானங்கள் உள்ளிட்ட பழக்கங்களை கற்றுக்கொள்ளும் முன்பாகவே மொபைல் போன்களை பயன்படுத்தி வேகமாக செக்ஸூக்கு அடிமையாகிவிடுவதாக, அந்நாட்டு பத்திரிக்கை நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள இங்கிலாந்து அரசாங்கம், அதில் இருந்து தனது நாட்டின் இளைய சமுதாயத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. இதற்காக இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் சமூக வலைதள நிறுவனங்களுடன் பிரிட்டன் அமைச்சர்கள் கூட்டம் நடத்ததிட்டமிட்டுள்ளனர்.

அதில் இணையதளங்களை நல்ல விஷயத்துக்கு பயன்படும் வகையில் எப்படி அமைப்பது என்று திட்டமிடப்படும் என தெரிகிறது. தவிர, இது போல பழக்கத்தினால் ஏற்படும் மன அளவிலான பிரச்சனை குறித்து ஆரோக்கிய வல்லுனர்களின் ஆலோசனைகளை இணையதளம் மூலமும் வழங்க இங்கிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.