விஸ்வாசம் – விமர்சனம்

தல அஜித், நயன்தாரா நான்காவது முறையாக ஜோடி சேர சிறுத்தையின் சிவாவின் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் விஸ்வாசம்.

இந்த படத்தை KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கதைக் களம் :

யாருக்கும் அடங்காத ஆளாக தன்னுடைய ஊருக்காக வரிந்து கட்டி கொண்டு சண்டைக்கு செல்பவராக நடித்துள்ளார் தல அஜித்.

மருத்துவரான நயன்தாரா இவரது ஊருக்கு மெடிக்கல் கேம்பிற்காக வருகிறார். முதலில் அஜித்திற்கு நயன்தாராவிற்கும் மோதல் ஏற்படுகிறது.

காலப்போக்கில் இந்த மோதல் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது.

இவற்றையெல்லாம் தாண்டி திடீரென இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு நயன்தாரா தன்னுடைய மகளுடன் சொந்த ஊரான மும்பைக்கே சென்று விடுகிறார்.

அதன் பின்னர் இவர்களின் மகளை கொல்வதற்காக ஒரு கும்பல் சதி திட்டம் தீட்டுகிறது.

இந்த கும்பலிடம் இருந்து தன்னுடைய மகளை அஜித் எப்படி காற்றுகிறார்? தன்னுடைய மனைவியான நயன்தாராவுடன் சேர்ந்தாரா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

தல அஜித் :

இதுவரை எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு ஒரு நகைச்சுவையும் நையாண்டி தனமும் கலந்த அஜித்தை இந்த படத்தில் காட்டியுள்ளார் சிறுத்தை சிவா.

அஜித்தின் ஆக்ஷன், எமோஷனல், ரொமான்ஸ் என அனைத்தும் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் வகையில் அமைந்திருப்பது மிக சிறப்பு.

நயன்தாரா :

படம் முழுவதும் வலம் வரும் மிக முக்கியமான கேரக்டரில் தன்னுடைய அழகான எதார்த்தமான நடிப்பை பதிவு செய்துள்ளார்.

ஜெகபதி பாபு :

படத்தில் வில்லனாக நடித்துள்ள ஜெகபதி பாபு அவரது கதாபாத்திரத்தை மிக சிறப்பாக நடித்து கொடுத்துள்ளார்.

இந்த படத்தின் மூலமாக அஜித்துடன் நடிக்கும் அவரது ஆசை நிறைவேறியுள்ளது.

மற்ற நடிகர் நடிகைகள் :

மற்ற நடிகர், நடிகைகளாக நடித்துள்ள யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, விவேக், கோவை சரளா ஆகியோரின் காமெடிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

இவர்களுடன் சேர்ந்து அஜித் அடிக்கும் லூட்டிகளும் ரசிகர்களை அதிகம் ரசிக்க வைத்துள்ளது.

தொழிநுட்பம்

இசை :

டி. இம்மானின் கிராமத்து இசை ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. அடிச்சு தூக்கு, வேட்டி கட்டு என அனைத்து பாடல்களும் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

எடிட்டிங் :

ரூபனின் எடிட்டிங் வழக்கம் போல இப்படத்திற்கு கட்சிதமாக கை கொடுத்துள்ளது.

ஒளிப்பதிவு :

வெற்றியின் ஒளிபதிவு ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அழகாக காட்டும் விதமாக அமைந்துள்ளது. நயன்தாரா, அஜித் என அனைவரையும் அழகாக காட்டியுள்ளார்.

சண்டை காட்சிகள் :

திலீப் சுப்புராயனின் ஸ்டண்ட் மற்றும் சண்டை காட்சிகள் ரசிகர்கள் ரசிக்க வைக்கும் வகையில் மாஸாக அமைந்துள்ளது.

இன்டெர்வல் காட்சியில் இடம் பெரும் ரெயின் பைட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

இயக்குனர் :

சிவாவின் கதை, திரைக்கதை, வசனங்கள் படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

ஆக்ஷன், எமோஷன் என படம் முழுவதையும் குடும்பமாக சேர்ந்து ரசிக்கும் படியான படமாக மாஸாகவும் கிளாஸாகவும் கொடுத்துள்ளார்.