விஸ்வாசம் டிரைலரை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

ரஜினியின் பேட்ட டிரெய்லரைத் தொடர்ந்து அஜீத்தின் விஸ்வாசம் டிரெய்லரும் வெளியாகி வைரலாகிக்கொண்டிருக்கின்றது. குறிப்பாக பேட்ட டிரெய்லரில் ரஜினி பேசும் வசனங்களுக்கு பதில் கொடுப்பது போன்று விஸ்வாசம் டிரெய்லரில் அஜீத் பேசும் வசனங்கள் அமைந்திருப்பதால் இரண்டு டிரெய்லர்களையும் ஒப்பிட்டு பட்டிமன்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், அஜீத்தின் விஸ்வாசம் டிரெய்லரை பாராட்டி நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார். இதுதான் தல மாஸ். வீரம் எனக்கு பிடித்தமாக படமாக இதுவரை இருந்தது. பொங்கலுக்குப்பிறகு விஸ்வாசமாக அது மாறும். இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் டி.இமான், படத்தொகுப்பாளர் ரூபன் என படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.