விஜயசேதுபதியின் மெழுகு சிலையை திறந்து வைத்த இயக்குனர் மகேந்திரன்!

விஜயசேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீ தரன். இவர் தற்போது விஜயசேதுபதியின் 25 படமான சீதக்காதி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அய்யா ஆதிமூலம் என்ற முதிர்ச்சியான வேடத்தில் நடித்துள்ளார் விஜயசேதுபதி. இப்படம் டிசம்பர் 20-ந்தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், இந்த படத்தில் அய்யா ஆதிமூலமாக நடித்துள்ள விஜயசேதுபதியின் மெழுகு சிலை சென்னையிலுள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் திறக்கப்பட்டது. அந்த சிலையை, பிரபல இயக்குனர் மகேந்திரன் திறந்து வைத்தார். அதோடு இவர், இந்த படத்தில் ஒரு நீதிபதி வேடத்திலும் நடித்துள்ளார்.

இந்த சீதக்காதி படத்தில் விஜயசேதுபதியுடன் அர்ச்சனா, ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர், மகேந்திரன், பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்துள்ளனர். பாஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.