விஜயகாந்தின் துணிச்சல் ரஜினிக்கு வருமா?

தமிழக அரசியல் வரலாற்றில் விஜயகாந்திற்கு ஒரு தனி இடம் உண்டு. காரணம், எம்ஜிஆர் ஆட்சி செய்த காலத்தில் கருணாநிதியை மட்டுமே எதிர்த்து அரசயில் செய்தார். அதேபோல் கருணாநிதியும் எம்ஜிஆரை எதிர்த்து அரசியல் செய்தார்.

ஆனால், விஜயகாந்த் அப்படியல்ல, கருணாநிதி. ஜெயலலிதா என்று இரண்டு அதிரடியான தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்தர்ர. அவர்கள் ஆட்சி காலத்தில் சிறிய கட்சித்தலைவர்களெல்லாம் இருக்க இடமே தெரியாமல் இருந்த நிலையில், விஜயகாந்தோ அவர்கள் இரவரும் செய்த தவறுகளை தைரியமாக தட்டிக்கேட்டார்.

குறிப்பாக, ஜெயலலிதாவை எதிர்த்து நின்று அரசியல்வாதிகளெல்லாம் பேச கூட அச்சப்பட்டு நின்ற காலத்தில் அவரையே தடுமாற வைத்த ஒரே அரசியல்வாதி விஜயகாந்த் மட்டுமே.

அந்த வகையில், தமிழக சட்டசபையில், ஜெயலலிதா செய்த தவறுகளை யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு பட்டியல்போட்டு கேள்வி கேட்டார் விஜயகாந்த். அவர் கேட்ட கேள்வியைப்பார்த்து அப்போது சட்டசபையில் அமர்ந்திருந்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே மிரண்டு போயின. அந்த அளவுக்கு ஜெயலலிதா அரசு செய்த தவறுகளை புள்ளிவிவரத்துடன் தட்டிக்கேட்டார் விஜயகாந்த்.

அப்படிப்பட்ட விஜயகாந்த் அரசியல் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் என்னை வாழ வைத்த தமிழக மக்களை வாழ வைக்கபபோகிறேன் என்று அரசியலுக்கு வருகிறார் ரஜினி.

தமிழ் மக்களிடம் சம்பாதித்த அனைத்து பணத்தையும் கொண்டு கர்நாடகாவில் பேக்டரி தொடங்கி அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் ரஜினி. அப்படிப்பட்டவர் கடைசி காலத்தில் நான் தமிழக மக்களை வாழ வைக்கப்போகிறேன் என்று வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார். இதற்கு சில தமிழக அரசியல் கட்சிகளும் சொம்பு தூக்கி வருகிறார்கள்.

மேலும், விஜயகாந்த் போன்ற தலைவர்கள் தமி¡கத்தில் பட்டிதொட்டியெல்லாம் சென்று அடித்தட்டு மக்கள் வரை நேரில் சந்தித்தவர்கள். அதனால்தான் மக்கள் பிரச்சினைகள் அவர்களுககு ட் தெரிகிறது. அதுசம்பந்தமாக குரல் கொடுக்கிறார்கள்.

ஆனால், ரஜினி, இன்னும் சென்னையை தாண்டி சென்றதில்லை. சென்னையிலும் உயர்மட்ட மக்கள் மத்தியில்தான் வாழ்ந்து கொண்டி ருக்கிறார். தமிழ்நாட்டு நிலைமைகள், தமிழ் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் எதுவுமே அவருக்கு தெரியாது.

ஆனபோதும், தமிழ்நாட்டை கைப்பற்றி காப்பாற்றப்போகிறேன் என்று சொல்கிறார்.

ஆனால் இதைக்கேட்டு, விஜயகாந்த் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தார் என்றால், தமிழக நிலவரத்தை சரிவர புரிந்து கொண்டு வந்தார். உண்மையிலேயே இறங்கி போராடி வருகிறார். ஆனால், மாட மாளிகையிலேயே நின்று கொண்டிருக்கும் ரஜினியால் விஜயகாந்த் அளவுக்கு இறங்கி வர முடியுமா? மக்களோடு மக்களாக வாழ்ந்து பார்க்க முடியுமா?

அதையெல்லாம் விட, தமிழகத்தைப்பற்றி ஏதாவது கேள்விகள் கேட்டால் சட்டபையில் இவரால் பதில் கொடுக்கத்தான் முடியுமா? ஆக, எதுவுமே தெரியாமல் முதல்வராகி விடுவேன் என்று மார்தட்டும் கன்னடன் ரஜினிக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று தமிழார்வலர்களும், தமிழகத்திலுள்ள நல்லவர்களும் கூறி வருகிறார்கள்.

இதை தமிழக மக்கள் காது கொடுத்து கேட்பார்களா? என்பதை தெரிந்து கொள்ள வரப்போகிற தமிழக சட்டமன்ற தேர்தல்வரை காத்திருப்போம்.