விஜயகாந்த் செண்டிமென்டை தொடரும் விஜய்!

1988ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் விஜயகாந்த் இரண்டு வேடங்களில் நடித்த படம் நல்லவன். இந்த படத்தில் விஜயகாந்துடன் ராதிகா, எம்.என்.நம்பியார், ஜனகராஜ் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

இப்படத்தில் விஜயகாந்த் அண்ணன்-தம்பி என இரண்டு வேடங்களில்  நடித்தர்ர.

அதில் அண்ணன் விஜயகாந்த் ரொம்ப நல்லவர், அமைதியானவர். அவர் ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொள்வார். பின்னர் அவரை தம்பி விஜயகாந்த் எப்படி காப்பாற்றுகிறார் என்றொரு கதையில் நல்லவன் படம் உருவாகியிருந்தது.

இரண்டுவிதமான வேடங்களில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் விஜயகாந்த். இப்படம் மிகப்பொ¢ய ¦வ்றறிபெற்றது. கலைப்புலி எஸ்.தாணு அப்படத்தை தயா¡¢த்திருந்தார்.

இந்த நிலையில், விஜயகாந்தினால் செந்தூரப்பாண்டி படத்தில் வளர்த்து விடப்பட்டவரான விஜய் தற்போது தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில்  நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். இந்த படம் பெண்கள் புட்பால் விளையாட்டை மையமாகக்கொண்ட கதையில் உருவாகிறது. விஜய்க்கு ஜோடியாக வில்லு படத்திற்கு பிறகு நயன்தாரா  நடிக்கிறார்.

மேலும், விஜய் நடித்த தெறி படத்தின் கதையை 1990ல் விஜய்காந்த் நடித்த சத்¡¢யன் படக்கதையை தழுவி உருவாக்கிய அட்லி, விஜய்யின் இந்த 63வது படத்தை விஜயகாந்த் 1988ல் நடித்த நல்லவன் படத்தை தழுவி கதை பண்ணியிருக்கிறார். நல்லவன் படத்தைப்போலவே இந்தப டத்திலும் விஜய் அண்ணன்-தம்பி என இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

நல்லவன் படத்தில் டாக்டராக நடித்த அண்ணன் விஜயகாந்தை தம்பி விஜயகாந்தை ஒரு பிரச்சினையில் இருந்து காப்பாற்றியதைப்போன்று இந்த படத்தில் ஸ்போட்ஸ் கோச்சாக நடிக்கும் விஜய்யை ஒரு பெரும் பிரச்சினையில் இருந்து காப்பாற்றுகிறாராம் சிபிஐ அதிகாரியாக நடிக்கும் தம்பி விஜய்.

ஆக, ஆரம்பத்தில் விஜயகாந்தின் மோதிரக் கையினால் குட்டு வாங்கிய அதிர்ஷ்டத்திற்கு பிறகு ஜெட் வேகத்தில் பயணிக்கத் தொடங்கிய விஜய், குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகரானார்.  அதோடு விஜயகாந்த் பாணியை பின் பற்றி ஆக்சன், செண்டிமென்ட் கதைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் விஜய், அவர் நடித்த படங்களைத்தழுவியும் தனக்கான கதைகளை தயார் செய்யுமாறு இயக்குனர்களை கேட்டுக்கொண்டு வருகிறர்ர.

அந்த வகையில்தான், சத்ரியனைத் தொடர்ந்து தற்போது விஜய்யின் 63வது படமும் விஜயகாந்தின் நல்லவன் படத்தைத்தழுவி உருவாகிறது. ஆக, விஜயகாந்தின் பாணியை தொடர்ந்து பின்பற்றி வெற்றிமேல் வெற்றி பெற்று வருகிறார் விஜய்.