என் மாமனார்தான் தைலம் தேய்த்து எனக்கு கால் அமுக்கி விடுவார்! விஜய் டிவி பிரியங்கா

priyanka-deshpande-1சின்னத்திரையில் தற்போது தொகுப்பாளினியாக உள்ள ப்ரியங்கா மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் உயர்ந்தவர்.

இவர் சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்து தவித்தவர். தனது தாயின் ஒத்துழைப்பினால் தான் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.

முதலில் சாதாரண மீடியாவில் அழகு குறிப்பு சொல்லும் நபராக தன வாழ்க்கையை தொடங்கிய ப்ரியங்கா பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இந்த தொலைக்காட்சி நடத்திய விருது வழங்கும் விழாவில் சிறந்த தொகுப்பாளிக்கான விருதை பெற்றார் ப்ரியங்கா. அப்போது இன்ப அதிர்ச்சியில் கதறி அழுத பிரியங்கா தான் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி செலுத்தினார்.

அப்போது தான் நிகழ்ச்சியை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று கால் வலியில் அவதிப்படும் போது எனது மாமனார் தான் எனக்கு தைலம் தேய்த்து கால் அமுக்கி விடுவார் என்று கூறினார்.

இதனால் சிலர் ப்ரியங்கா அவரது மாமனார் இமேஜ்ஜை டேமேஜ் செய்து விட்டதாக அவரை தொடர்பு கொண்டு இதெல்லாமா வெளியே சொல்லுவ என திட்டியுள்ளனர்.