விஜய்யின் சர்கார் கதையை லீக் அவுட் செய்த ராதாரவி!

ரஜினி நடித்த அண்ணாமலை படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ராதாரவி. அந்த படத்தில் அவர் அடிக்கடி கூட்டிக்கழிச்சிப்பாரு கணக்கு சரியா வரும் என்ற ஒரு டயலாக்கை சொல்வார். ஆனால் கிளைமாக்சில் அவரிடம் அதே டயலாக்கை ரஜினி திருப்பிப்பேசுவார்.

அதேபோல் இப்போது விஜய்யின் சர்கார் படத்திலும் வில்லனாக நடித்து வரும் ராதாரவி பல காட்சிகளில் ஒரே டயலாக்கை ரிப்பீட்டு செய்வாராம். ஆனால் கிளைமாக்சில் அந்த டயலாக்கை அவரிடமே திருப்பி பேசுவாராம் விஜய். அந்த வகையில் இந்த வசனம் அண்ணாமலை படத்தைப்போன்று சர்காரிலும் இடம்பெற்றிருப்பதாக சொல்கிறார் ராதாரவி.

ஏற்கனவே சர்கார் படத்தில் அரசியல் கட்சிகளுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இப்போது ரஜினியின் அண்ணாமலை பாணியில் டயலாக் இடம் பெற்றிருப்பதாக இன்னொரு பரபரப்பை உருவாக்கி விட்டுள்ளார் ராதாரவி.