அடுத்த மாதம் விஜய்யின் சர்கார் சிங்கிள் டிராக்!

துப்பாக்கி. கத்தி படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்கார். விவசாயம், அரசியல் கலந்த கதையில் தயாராகி வரும் இந்த படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி விட்ட நிலையில், தற்போது ஐந்து நாட்களாக சர்கார் படத்தின் ஒர்க்கிங் ஸ்டில் வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டோக்களாக வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும், தீபாவளிக்கு திரைக்கு வரும் சர்கார் படத்தின் இசை விழா அக்டோபர் 2-ந்தேதி வெளியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னதாக, செப்டம்பர் 19-ந்தேதி சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகயிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.