தமிழ்நாட்டின் முதலமைச்சராகும் விஜய்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகி விட்ட நிலையில், இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டைட்டீல் வெளியானதில் இருந்தே இப்படம் அரசியல் கதையில் உருவாகி வருவது தெரிந்து விட்டது. அதோடு அரசியல் கட்சி கூட்டம் நடைபெறுவது போன்ற  சர்கார் புகைப்படங்கள் வெளியானபோது அது இன்னும் உறுதியானது.

இந்நிலையில் தற்போது தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த பாரத் அனே நேனு படத்தில் அவர் கிளைமாக்ஸில் முதலமைச்சராக விடுவது போன்று கதை  உருவாக்கப்பட்டிருந்தது. அதேபோன்று சர்கார் படத்தின் கிளைமாக்ஸிலும் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராவது போன்று கிளைமாக்ஸ் இடம் பெற்றிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.