வைரலாக பரவிய விஜய்யின் பைரவா டீசர்!

vijaiபரதன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் பைரவா. பொங்கலுக்கு திரைக்கு வரும் இந்த படத்தின் டீசர் நேற்று இரவு 12.01மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவித்திருந்தனர். ஆனால் நேற்று இரவு 9 மணி அளவில் பைரவா டீசர் இணையதளங்களில் வைரலாக பரவியது. இதனால் நள்ளிரவு டீசர் வெளியாகும் என்றுஆவலுடன் காத்திருந்த விஜய் ரசிகர்கள் முன்னதாகவே வெளியாகி விட்டதால் இன்பஅதிர்ச்சியடைந்தனர். அதனால் பைரவா டீசரை அவர்கள் நேற்று இரவு முதல் இணையதளங்களில் டிரண்டிங் செய்யத் தொடங்கி விட்டனர். குறிப்பாக, இதற்கு முன்பு வெளியான கபாலி, வேதாளம் உள்ளிட்ட சில மெகா படங்களை விடவும் விஜய்யின் பைரவா பட டீசரை பெரிய அளவில் பிரபலப்படுத்த விஜய் ரசிகர்கள் வரிந்து கட்டியுள்ளனர்.