கிருத்திகா உதயநிதி திறமையான இயக்குனர்! -விஜய் ஆண்டனி

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் காளி. இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் சுனேனா, அஞ்சலி, அம்ரிதா அய்யர் என பலர் நடித்துள்ளனர். மே 18-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

 

அப்போது விஜய் ஆண்டனி பேசுகையில், இந்த காளி படத்தோடு கதை எனக்கு ரொம்ப பிடிச்சி நடிக்கிருக்கேன். இது கண்டிப்பாக எல்லாதரப்பு ஆடியன் சுக்கும் பிடித்தமான படமாக இருக்கும். வணக்கம் சென்னை படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

 

கிருத்திகா உதயநிதியைப்பற்றி சொல்லனும்னா, ரொம்ப எளிமையானவர், திறமையானவர். ஸ்பாட்டில் யாருக்கும் டென்சன் கொடுக்காத இயக்குனர். அதே சமயம் தனக்கு என்ன தேவையோ அந்த நடிப்பை கேட்டு வாங்கி விடுவார். அனைவரிடமும் ரொம்ப ப்ரண்ட்லியா பழகுவாங்க.

 

நான் எப்பவுமே ஒரு படத்தோட கதையை செலக்ட் பண்ணும்போது கதைய மட்டுமில்லாம அதை டைரக்ட் பண்றவங்களோட கேரக்டரையும் பார்ப்பேன். ஏன்னா படப்பிடிப்பு நடக்கும்போது அவங்களோட கேரக்டர் நம்மளை டென்சன் பண்ணாம இருக்கனும். அப்பத்தான் ஸ்பாட்டில் முழு ஈடுபாட்டோட ஒர்க் பண்ண முடியும். இதுல நான் ரொம்ப உறுதியா இருப்பேன்.

 

மேலும், இதுக்கு முன்னாடி கிருத்திகா எங்கிட்ட ஒரு கதை சொன்னாங்க. அதுவும் நல்ல கதைதான். நான் ஏன் நடிக்கலேன்னா எனக்குன்னு சில வரையரை இருக்கு. நான் அதை மீற முடியாது. அதனால்தான் அதுல நடிக்கல. ஆனா மற்ற ஹீரோக்களுக்கு அந்த கதை செட்டாகும்.

 

அதோடு கிருத்திகா உதயநிதி நல்ல கதை நாலேஜ் உள்ளவங்க.  இந்த படத்தை 73 நாள்ல எடுக்க திட்டமிட்டாங்க. ஆனா 50 நாள்ல படத்தை முடிச்சுக் கொடுத்தாங்க. எந்தவித பரபரப்பும் இல்லாம அமைதியா அழகா படத்தை எடுத்தாங்க.

 

ஆண்களுக்கு இணையா  பெண்களாலும் சாதிக்க முடியம் என்பதை இந்த படத்தில்  நிரூபிச்சிருக்காங்க கிருத்திகா உதயநிதி.

 

இந்த படத்தோட கேமராமேன் ரிச்சர்ட் நல்ல கடின உழைப்பாளி. நிறைய இடங்களில் கேமராவ கழுத்துல தொங்கபோட்டுக்கிட்டு நடந்தாரு.  இந்த படத்தில் அவரோட உழைப்பு அசாத்தியமானது.

 

முக்கியமா, என்னோட முந்தைய படங்களை பார்த்துட்டு நீங்க ஏன் ஹீரோயினிய தொட்டு நடிக்க மாட் டேங்கிறீங்கன்னு எல்லோரும் கேட்டாங்க. அதனால் இந்த படத்துல அம்ரிதாவோட இதுவரை பண்ணாத அளவுக்கு அதிகமாக  ரொமான்ஸ் பண்ணியிருக் கேன்.  இந்த படத்துக்கு அப்புறம் விஜய் ஆண்டனி சீரியசான நடிகர், ரொமான்ஸ்க்கு செட்டாக மாட்டாருன்னு யாருமே சொல்லமாட்டாங்க.

 

இந்த காளி படத்துக்கு அப்புறமா திமிரு புடிச்சவன் படத்துல நடிச்சிட்டு இருக்கேன். அதுக்கு அப்புறமா கொலைகாரன் அப்படிங்கிற ஒரு படத்துல நடிக்கப் போறேன் என்றார் விஜய் ஆண்டனி.

 

 

Tags- vijai antony, kiruthika uthayanithi, kaali.

 

விஜய் ஆண்டனி, கிருத்திகா உதயநிதி, காளி.