விஜய் 63 – அதிகாரப்பூர்வ தகவல்!

விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்தை அட்லி இயக்க இருக்கிறார் என்றும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. தற்போது தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் அதை உறுதி செய்திருக்கிறார்கள்.

ஏ.ஜி.எஸ். தயாரிக்கும் ‘தளபதி 63’ படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். விரைவில் இப்படத்தில் மற்ற நடிகர்கள், நடிகைகள், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பட்டியலை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.