விஜய் 62 படத்தின் அப்டேட் …!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `தளபதி 62′ படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

`பைரவா’ படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது.

சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் கிடைத்த தகவலின்படி `தளபதி 62′ படத்திற்கான பணிகளை ஏ.ஆர்.ரகுமான் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். கலை பணிகளை சந்தானம் மேற்கொள்கிறார். தற்போது விடுமுறைக்காக சீனா சென்றுள்ள விஜய், இந்தியா திரும்பிய பின்னர், ஜனவரி கடைசி வாரம் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.