விஜய்யின் ரசிகை வரலட்சுமி!

கடந்த ஆண்டு சண்டக்கோழி-2, சர்கார் என இரண்டு படங்களில் வில்லியாக மிரட்டியிருந்தார் வரலட்சுமி. அவரது வில்லி நடிப்பை பாராட்டிய தனியார் இணையதளம் ஒன்று அவருக்கு சிறந்த வில்லி நடிகைக்கான விருது வழங்கி கெளரவித்துள்ளது.

இந்த விழாவில் விஜய், விஷாலுடன் வில்லியாக நடித்த அனுபவம் குறித்து வரலட்சுமியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, சண்டக்கோழி-2 படத்தில் அரிவாள், கத்தி என சில ஆயுதங்களுடன் நடிக்க வேண்டியிருந்ததால் பயிற்சி எடுத்து நடித்தேன். அதோடு விஷால் எனக்கு நன்கு தெரிந்தவர் என்பதால் நடிப்பதில் சிரமமில்லை.

ஆனால் சர்கார் படத்தில் விஜய்யுடன் நடிப்பது பதட்டமாக இருந்தது. அதேசமயம் நான் அவரு டைய தீவிரமான ரசிகை என்பதால் மனதளவில் மகிழ்ச்சியாகவும் இருந்தது என்று தெரிவித்துள்ளார் வரலட்சுமி.