பாட்டியாக கூட நடிப்பேன்! -நிவேதா பெத்துராஜ்!

ஒரு நாள் கூத்து படத்தின் மூலமாக பிரபலமானவர் நிவேதா பெத்துராஜ், இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் நிவேதா பெத்துராஜிற்கு அமைந்தன.

தற்போது ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடந்தது.

அப்போது பேசிய நிவேதா, ஜெயம், ரவியின் மகன் ஆரவ் பற்றியும் பேசியிருந்தார். அப்போது ஆரவிற்கு இது தான் முதல் படம்.

உன்னுடைய 100-வது படத்திலும் நான் நடிப்பேன் அது உனக்கு பாட்டி ரோலாக கூட இருக்கலாம் என கூறியுள்ளார்.