காதல்  வதந்தியில் சிக்கிய தமன்னா!

நடிகை தமன்னாவின் அமெரிக்க டாக்டர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரையே தமன்னா திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் ஒரு பரபரப்பு செய்தி இணையதளங்களில் வைரலாகியிருக்கிறது. இதனால் கடும் அதிர்ச்சி அடித்துள்ளார் தமன்னா. அதோடு, இந்த செய்திக்கு உடனடியாக தமன்னா தனது டுவிட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நான் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்தே இப்படித்தான் நடிகர். கிரிக்கெட் வீரர் என எத்தனையோ பேரை நான் காதலிப்பதாக வதந்திகளை பரப்பிவிட்டனர். இப்போது அமெரிக்க டாக்டரை காதலித்து வருவதாக வதந்தி பரப்பியிருக்கிறார்கள்.

இந்த வதந்திகளைப் பார்த்தால் நான் கணவரை கடை கடையாக தேடும் பணியில் இருப்பது போல் தெரிகிறது. காதல் எனக்கு பிடிக்கும் என்றாலும் என் தனிப்பட்ட ஆதரமில்லாத வதந்திகளை ஏற்க முடியாது.

மேலும், நான் தற்போது சிங்கிளாக சந்தோஷமாக இருக்கிறேன். என் பெற்றோர் எனக்கு மாப்பிள்ளை தேடவில்லை. சினிமாவைதான் நான் தற்போது காதலித்து வருகிறேன். நான் திருமணம் செய்து கொண்டால் அனைவருக்கும் தெரிவித்து விட்டுத்தான் செய்து கொள்வேன். அதனால் எனது திருமணம் குறித்து யாரும் கற்பனையான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று தன்னைப்பற்றி பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தமன்னா.