தமிழ்ப்படம்-2

மிர்ச்சி சிவா நடிப்புல சி.எஸ்.அமுதன் இயக்கிய திரைக்கு வ்நதுள்ள தமிழ்ப்படம் 2 படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

சி.அமுதன் இயக்கத்துல சிவா நடிச்சு முதல்ல வெளிவந்த தமிழ்ப்படத்துல வில்லன் டியை துரத்தவார் சிவா. அதே மாதிரி தமிழ்ப்படம்2வுல வில்லன் பியை துரத்துகிறார். இதுதான் இந்த படத்தோடு ஒன் லைன். பெருசா கதை எதுவும் இந்த படத்துல இல்லைங்க. மத்த படஙக்ளை கலாய்ச்சே படத்தை ஓட வச்சிடலாம்ம்னு பிளான் பண்ணி எடுத்திடுக்காங்க.

நாயகன் சிவா எப்ப வாயை திறந்தாலும் காமெடி சரவெடியாகத்தான் இருக்கு. அதேசமயம் அவரது பாடிலாங்குவேஜ்ல எந்த நெளிவு சுழிவும் இல்லை. வாய்க்கு மட்டுமே வேலை கொடுத்து வாய் உள்ள புள்ளை எப்படியும் புளைச்சிக்கிடும்ன்னு சொல்ற மாதிரி பேசிப்பேசியே படத்தை நகர்த்திட்டு போறாரு சிவா. அவரது பேச்சு கலகலப்பாவும் இருக்கு.

முக்கியமாக கதையோட பயணிக்கிறதை விட, மத்த படஙக்ளை கலாய்க்கிறதுலத்தான் டைரக்டர் முழுக்கவனம் செலுத்தியிருக்கிறாரு அப்படின்னுதான் சொல்லனும். விண்ணைத்தண்டி வருவாயா, விவேகம், வேதாளம், பாகுபலி, கபாலி, 2.ஓ ன்னு பல படங்களோட சீனை வச்சித்தான் விளையாடியிருகுகிறாரு டைரக்டர்.

ஆனா அதுவும் சரியாக விளையாடியிருக்கிறாரான்னு பார்த்தா பெருசா இல்லை. ஆடியன்சு விழுந்து விழுநிது சிரிப்பாங்ன்னு அவங்க நெனைச்ச காட்சிகளெல்லாம் படு மொக்கையாத்தான் இருக்கு.

காட்சிகளை தட்டுத்தடுமாறி நகர்ந்துக்கிட்டு இருக்கிறப்ப. அப்பப்பப்ப பாட்டை வேற போட்டு இன்னும் படத்தை ஸ்லோ பண்றாங்க.

அதோடு, சந்தான பாரதி, ஆர்.சுந்தர்ராஜன், மனோபாலான்னு மூன்று நரைமுடிகளை பாய்ஸ் படத்துல வர்ற சித்தார்த், பரத், நகுல் மாதிரி காலேஜ் பசங்களா காண்பிச்சிருக்காரு டைரக்டர். இவங்களெல்லாம் சிவாவோட ப்ரண்சுங்க. எப்படி பொண்ணுங்களை கரெக்ட் பண்றதுன்னு அவங்களும் அப்பப்ப இவருக்கு ஐடியா கொடுக்கிறாங்க.

ஆனா அவங்களை வச்சி சரியான வேலை வாங்கல. சாதாரண காட்சிகளிலேயே வந்து சி¡¢ப்ப ஏற்படுத்துற மனோபாலாவுக்கு இந்த படத்துல சி ரிக்க வைப்பதற்கான வாய்ப்பே கொடுக்கப்படல.

இதுல காமெடியன் சதீஷ் வில்லன் பி அப்படிங்கிற கேரக்டர்ல டானா நடிச்சிருக்கிறாரு. ஒவ்வொரு
சீன்லயு ஒவ்வொரு கெட்டப்புல வர்றாரு. அது ஒன்னுதான் மிச்சம். மத்தபடி காமெடியன்னு சொல்ற அவரு நடிப்ப பார்த்தா யாருக்கும் சி¡¢ப்பு வராது.

அதோடு க்ளைமாக்சுல ஒரு சரித்திர காலத்து பிளாஷ்பேக்க சொல்றாங்க. அதுல மிர்ச்சி சிவாவும்,
சதீக்கும் நடனப்போட்டி நடக்குது. இப்படியெல்லாம் ஒரு நடனப்போட்டி எந்த தமிழ்ப்படத்துலயும் பார்த்த தில்லை. இனிமேலும் பார்க்கவும் முடியாது. அப்படி யொரு நடனப்போட்டி. இல்லை சிரிக்க வைக்கிற மாதிரியாவது பண்ணியிருக்கனும். அந்த காட்சிய சீரியசா பண்ணி, ஆடியன்சையும் சீரியசாக்கிட்டாங்க.

இதுக்கெல்லாம் மேல, படத்தை வெளியிடுவதுக்கு முன்னாடி பல படங்களை கலாய்ச்சு, விளம்பரம் பண்ணினாங்க. அது இந்த படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்திடுச்சு. ஆனா தியேட்டர்ல போய் பார்த்தா அப்படி எதுவும் சொல்லிக்கிற மாதிரி இல்ல.

சென்சார்ல நிறைய காட்சிகளை துவம்சம் பண்ணிருப்பாங்கன்னு தெரியுது. அவங்க படத்துல இந்த மாதிரி காட்சிகளெல்லாம் இருக்குன்னு வெளியிட்ட பல போட்டோக்களோட காட்சிகளே படத்துல இல்லை. அந்த அளவுக்கு சென்சார் கத்தரி விளையாடி இருக்கிறதையும் தெரிஞ்சிக்க முடியுது.

அந்த வகையில், டிரெய்லர் நல்லா இருந்துச்சு. படம்தான் சொதப்பட்டாங்கன்னு சொல்ற மாதிரி. டிரெய்லரை நல்லா காண்பிச்ச டைரக்டர் சி.எஸ். அமுதன் படத்தை நல்லாவே சொதப்பியிருக்கிறாரு.
இதோட முடிச்சுக்குங்க பாஸ், மூனாம் பாகம், நாலாம் பாகம்ன்னு செர்லலி ஆடியன்ச இன்னும் வெறுப் பேத்தாதீங்க.