‘சுற்றலாம் சுவைக்கலாம்’

நியூஸ் 7தமிழ் தொலைக்காட்சியில்  ஆகஸ்ட் 5 முதல் ‘சுற்றலாம் சுவைக்கலாம்’ நிகழ்ச்சி புதுப்பொலிவுடன் சீசன் – 2ஆக வரவிருக்கிறது. அபிஷேக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்

 “வாசனையை பார்த்தே குழம்பில் உப்பு,புளி,காரம் சரியாக இருக்கிறதா என்பதை ஒரு துப்பறியும் நிபுணனைப்போல கண்டுபிடித்து விடுவேன்” என்று உற்சகமாக சொல்கிறார் அபிஷேக். 

 ஒவ்வொரு ஊரின் சிறப்புகளையும் உணவின் மகிமைகளையும் உரக்க சொல்வது தான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அந்தந்த ஊர்க்காரர்களுக்கே வியப்பளிக்கும் தகவல்களை சொல்ல வேண்டும் என்ற இலக்கோடு பயணிக்கிறோம் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் இதன் இயக்குனர் மனோஜ்