சூர்யா-36-ல் ரகுல் ப்ரீத் சிங்!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் பூஜை சென்ற 1-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறது. இந்த படத்தில் ‘பிரேமம்’ படப் புகழ் சாய் பல்லவி ஒரு கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று ஏற்கெனவே படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். இப்போது இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங்கும் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இன்னமும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்த ரகுல் ப்ரீத் சிங் இப்போது சூர்யாவுடனும் இணைந்து நடிக்க உள்ளார்.

சூர்யா நடிக்கும் 36-ஆவது படமான இப்படத்திர்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.