சூர்யாவை அசர வைத்த ஜோதிகா!

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி படத்தில் அறிமுகமானவர் ஜோதிகா. அதன்பிறகு விஜய்யை வைத்து அவர் இயக்கிய குஷி படத்தில் நாயகியாக நடித்த ஜோதிகா பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் தமிழ் சினிமாவில் ஜெட் வேகத்தில் வளர்ந்த ஜோதிகாவிற்கென்று ஒரு ரசிகர் வட்டம் உருவானது.

அதோடு, ஆடை குறைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்த ஜோதிகா, கோலிவுட்டின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஒரு பெரிய ரவுண்டு வந்தார். ரஜினியுடன் அவர் நடித்த சந்திரமுகி அவரது திறமைக்கு சான்றாக அமைந்த படங்களில் முக்கியமான படமாகும்.

அதோடு, திருமணத்திற்கு பிறகு மறுபடியும் செலக்டீவான படங்களாக நடித்து வரும் ஜோதிகா நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள படம் காற்றின் மொழி. ராதாமோகன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜோதிகா நடித்துள்ள சில காட்சிகளை சமீபத்தில் ஒருநாள் பார்த்துள்ளார் சூர்யா. அப்போது தன்னையுமறியாமல் கைதட்டி ரசித்திருக்கிறார். அந்த அளவுக்கு சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளில் தனது நடிப்பினால் சூர்யாவை அசத்தியிருக்கிறாராம் ஜோதிகா.

மேலும், இந்த படத்தில் ஜோதிகாவின் இயல்பான நடிப்புக்கு விருது கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் சொல்கிறார் காற்றின்மொழி இயக்குனர் ராதாமோகன்.