பலத்த அதிர்ச்சியில் சன்னிலியோன்!

சமீபகாலமாக எந்த படங்கள் வெளியானாலும் அவற்றை தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சில இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிட்டு வருகிறார். இதனால் பல படங்களின் வசூல் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சன்னிலியோனின் வாழ்க்கை வரலாறு தொடரான கரன்ஜித்கவுர் அன்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னிலியோன் -என்ற தொடர் இணையதளத்தில் வெளியாகி வருகிறது. இந்த தொடரை சந்தாதாரர்கள் மட்டும்தான் பார்க்க முடியும்.

சன்னிலியோனின் இளம் வயது, பின்னர் அவர் ஆபாச வீடியோக்களில் நடித்தது தொடங்கி அவரது வாழ்க்கையில் இதுவரை நடந்த அனைத்து விசயங்க ளும் இந்த தொடரில் இடம்பெறுகிறது. அதனால் இதுவரை சினிமாக்களில் நடித்து வந்த சன்னிலியோன், இந்த வாழ்க்கை வரலாறு தொடரில் நிஜமாலுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஆனால், இப்போது சினிமா படங்களை இணைய தளங்களில் திருட்டுத்தனமாக வெளியிடுவது போன்று இப்போது சன்னிலியோனின் வாழ்க்கை வரலாறு தொடரையும் திருட்டுத்தனமாக வெளியிட்டு வருகின்றனர். இதனால் சினிமாவுக்கு இணையான பட்ஜெட்டில் இந்த தொடரை தயாரித்து வரும் நிறுவனமும், சன்னிலியோனும் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.