சிவாஜி பேரனை காதலிக்கும் சுஜா வருணி, நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா?

பிக் பாஸ் புகழ் சுஜா வருணிக்கும் சிவாஜியின் பேரன் சிவாஜி தேவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறப்பட்டது குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.

திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார் சுஜா வருணி. இந்நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார்.

தனது திரைப்பயணம் மெதுவாக சென்றாலும் தனக்கு நல்லது நடக்கும் என்று பொறுமையுடன் காத்திருக்கிறார் சுஜா.

சுஜா வருணியும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமாரின் மகன் சிவாஜி தேவும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

சுஜா வருணிக்கும், சிவாஜி தேவுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும் விரைவில் திருமண அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சுஜா வருணி, சிவாஜி தேவுடன் இருக்கும் திருப்பதி கோவிலில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. சுஜா புடுச்சாலும் புடுச்சார் புளியங்கொம்பாக புடுச்சிருக்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.

சிங்கக் குட்டி படம் மூலம் நடிகரானவர் சிவாஜி தேவ். புதுமுகங்கள் தேவை, இதுவும் கடந்து போகும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

எனக்கும், சிவாஜி தேவுக்கும் நிச்சயதார்த்தம் எல்லாம் நடக்கவில்லை. சுப்ரபாதம் தரிசனத்திற்காக திருப்பதி சென்றோம். நிச்சயதார்த்தம் எதுவும் நடந்தால் கண்டிப்பாக சொல்கிறேன் அதுவரை வதந்தி பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் சுஜா வருணி.