ஸ்ரீரெட்டி பாணியில் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய பயல் ராஜ்புத்!

தெலுங்கு, தமிழ் சினிமாக்களில் ஸ்ரீரெட்டி ஏற்படுத்திய அதிர் வலைகளே இன்னும் ஓயாத நிலையில், தற்போது இன்னொரு நடிகையும் ஒரு புகாரை வெளியிட்டு தெலுங்கு சினிமாவில் மீண்டும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறார்.

கடந்த மாதம் தெலுங்கில் வெளியான படம் ஆர்எக்ஸ் 100. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் பயல் ராஜ்புத். அந்த படத்தின் வெற்றிகாரணமாக தற்போது புதிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஒருவர், பயல் ராஜ்புத்தை தனது புதிய படத்திற்கு ஒப்பந்தம் செய்தவர், பாலியல் உறவுக்கு அழைத்திருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பயல்ராஜ்புத், அதற்கு மறுத்ததோடு, அந்த படத்தில் இருந்தே  விலகி விட்டாராம். அதையடுத்து இந்த செய்தியை தற்போது டோலிவுட்டில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பயல் ராஜ்புத்.