சிவகார்த்திகேயன் வெளியிட்ட புத்தாண்டு வீடியோ!

ஒரு வீடியோவில் புத்தாண்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். 2018ம் ஆண்டு நடிகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக என அனைத்து முயற்சிகளுக்கும் சிறப்பான வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த வரவேற்பு தான் நம்பிக்கை தருகிறது. அடுத்து நல்ல முயற்சிகள் எடுக்க உதவுகிறது. என் மகள் ஆராதனா பாடிய வாயாடி பெத்த புள்ள பாடலுக்கு வரவேற்பு கொடுத்ததற்கு ஸ்பெசல் தேங்கஸ்.

நண்பர்கள் சேர்ந்து நம்பிக்கை அடிப்படையில் எடுத்த கனா படத்திற்கு வரவேற்பு கொடுத்த தற்கும் நன்றி. இந்த மாதிரி நல்ல படைப்புகளை ஆதரிக்கும்போதுதான் இன்னும் நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்ற ஆர்வமும், நம்பிக்கையும் ஏற்படுகிறது.

மேலும், இந்த 2019ல் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரியில் வெளியாகிறது என்று அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.