சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இரண்டாவது படம்!

கனா படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க, ஐஸ்வர்யா ராஜேஸும், சத்யராஜும் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தயாரிப்போடு ஒரு பாடலையும் பாடி, சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படம் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

இந்தப் படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
அப்போது தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்தப் படம் பற்றிய தகவலையும் வெளியிட்டார் சிவகார்த்திகேயன். பிரபல யூ ட்யூப் சேனல் குழுவினர் இயக்கும் படத்தினை சிவா தயாரிக்கிறாராம். அந்த படத்தில் வி.ஜே – வாக இருந்து சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரியோ ஹீரோவாக நடிக்கிறார்.