சிம்பு – ஓவியா மேரேஜ் போட்டோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது அதில் பங்கேற்ற ஆரவ்வை காதலிப்பதாக ஓவியா அறிவித்தார்.

ஆனால் அந்த காதல் முறிந்துபோனாலும், ஓவியாவுக்கு ரசிகர்கள் அதிகளவில் குவிந்தனர்.

இந்நிலையில் இந்த புத்தாண்டு தொடக்கத்தின் போது சிம்பு இசையில் ஓவியா பாடிய மரண மட்டை என்ற ஆல்பம் வெளியானது.

இது ரசிகர்கள் மத்தியில் பாப்புலராகி வரும் நிலையில் திடீரென சிம்புவும் ஓவியாவும் திருமணம் செய்துக் கொண்டதுபோல ஒரு போட்டோ இணையத்தில் வெளியானது.

இது முற்றிலும் கிராபிக்ஸ் செய்த படம் என்பது தெளிவாகிவிட்டது.

ஆனால் வேலை வெட்டி இல்லாமல் இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபடும் அந்த கிராபிக்ஸ் விஷமிகளால் இரு தரப்பும் டென்ஷனில் இருக்கிறதாம்.