கவர்ச்சி போஸ் கொடுத்த ஷாரூக்கானின் மகள்!

பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகள் சுஹானா கானின் போட்டோக்கள் அவ்வப்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு தனது பாய் பிரண்டுகளுடன் அவர் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் மற்றும் நீச்சல் குளத்தில் அவர் நீராடிய போட்டோக்களும் இணையதளங்களில் வைரலாகின.

இதனால் மீடியாவுக்கு வராமலேயே சோசியல் மீடியாவில் பிரபலமானவராகி விட்டார் சுஹானாகான். இவர், தற்போது வோக் என்ற ஆங்கில மேகஸின் அட்டைப்படத்திற்கு கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்துள்ளார்.

பெரும்பாலும் பாலிவுட் பிரபலங்கள் மட்டுமே இந்த இதழின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்து வரும் நிலையில், இப்போது சுஹானாகான் இடம் பெற்றிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தனது தந்தை தனக்கு தன்னம்பிக்கை கொடுத்து வளர்த்திருப்பதையும், அவரது பர்சனல் கேரக்டர் குறித்து இந்த இதழுக்கு பேட்டி அளித்துள்ளார் சுஹானாகான்.