செக்ஸ்க்கு ஏற்ற நேரம் எது?

shuddh-desi-romance_137585544010இரவைவிட காலைப்பொழுதில் உடலுறவுக்கொள்வது உடலுக்கு நல்லதென ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெரும் புரிதலுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது உடல் நலத்திற்கு நல்லதென பல ஆய்வுகள் கூறியுள்ளன. அதேபோன்று காலை வேளையில் உடலுறவு கொள்வதும் நல்லதென தெரியவந்துள்ளது. பெரும்பாலானவர்கள் இரவு நேரங்களில் தான் செக்ஸ் வைத்துக்கொள்ள என்ற எண்ணத்துடன் இருப்பது வழக்கம் தான். ஆனால் காலை கண் விழித்ததும் செக்ஸ் வைத்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் தரும் என சொல்லப்படுகிறது. இவ்வாறு காலை வேளையில் உடலுறவில் ஈடுபடுவது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. மேலும் மகிழ்ச்சியாக இருக்க தேவையான ஹார்மோன்கள் அதிகம் சுரக்கின்றன. அதேபோன்று ரத்த அழுத்தம், இதய நோய்களில் இருந்தும் காத்துக்கொள்ளலாம். அதனால் இரவைவிட காலை நேரமே உடலுறவு வைத்துக்கொள்ள ஏதுவானது என்று தெரியவந்துள்ளது.