செளகார் ஜானகியின் கருத்துக்கு சமந்தா-சின்மயி எதிர்ப்பு!

மீடூ ஹேஷ்டேக் மூலம் நடிகைகள் பலரும் தாங்கள் சந்தித்த பாலியல் பிரச்சினைகளை  அம்பலப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து குறித்து வெளியிட்ட பாலியல் குற்றச்சாட்டு மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதேசமயம் மீடூ விற்கு பலர் ஆதரவு தெரிவித்தபோதும், ஒருசாரர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள். குறிப்பாக, பழம்பெரும் நடிகையான செளகார் ஜானகி இதுகுறித்து ஒரு பேட்டியில், இது ஒரு மட்டமான விளம்பர தேடல் என்று கூறியுள்ளார். அதோடு, என்றைக்கோ ஒருநாள் நடந்தது, நடக்காதது,  நடந் திருக்க வேண்டியது என பட்டியலிட்டு சொல்வது அவசியமா? இந்த செயல்பாட்டினால் சாதிக்கப்போவது என்ன? இது குற்றம் சாட்டப்படுபவரைத்தான் பாதிக்கும். நானும் ஒரு பெண்ணியவாதிதான். என்றாலும் இதுபோன்ற செயல்களுக்கு ஒருபோதும் ஆதரவு கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

செளகார்ஜானகியின் இந்த கருத்தை அறிந்த பாடகி சின்மயி தனது டுவிட்டரில், அவரது இந்த பேட்டி யைப்பார்த்து தான் கதறி அழுததாக தெரிவித்துள்ளார். நடந்தது, நடக்காதது என அவர் குறிப்பிட்டி ருப்பதை என் மனதை பாதித்து விட்டது. மீடூ குற்றவாளிகளுக்கு இன்னும் இவரைப்போன்று எத்தனை சினிமாத்துறையினர் ஆதரவு தரப்போகிறார்கள் என்பதை பார்ப்போம் என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார் சின்மயி.

நடிகை செளகார் ஜானகியின் இந்த கருத்து குறித்து சமந்தா கூறும்போது, செளகார் ஜானகி மீடூவைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் இந்த கருத்தினை வெளியிட்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.