சமந்தாவுக்கு 2017 ஆகஸ்டில் திருமணம்!

samantha-bikini-stills-from-anjaan-02நடிகை சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் 2017 ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாகசைதன்யா, சமந்தா இருவரின் காதல் உலகமே அறிந்தது. இவர்களுக்கு திருமணம் ஆகும் வரை இவர்களின் திருமணம் பற்றிய செய்திகள் தினமும் வந்து கொண்டுதான் இருக்கிறது. இவர்களின் திருமணம் எப்போது என்று தினமும் மீடியாக்களில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதெற்கால்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது அவர்களின் திருமணம் எப்போது பற்றிய விவரம் வெளியாகிவுள்ளது. அதன்படி அவர்களின் திருமணம் அடுத்த ஆண்டான 2017 ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. முதலில் இந்து முறைப்படியும் அதற்கடுத்து கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார்களாம் இந்த காதலர்கள்.

சமந்தா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர், அவரது பெற்றோர் அந்த முறையிலும் திருமணம் நடக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறார்கள். அதனால்தான் இரு மத முறைப்படியும் திருமணம் நடக்க உள்ளதாம்.நாக சைதன்யாவின் தம்பி அகிலின் திருமணம் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க உள்ளது. ஒரே ஆண்டில் தன் மகன்களின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி முடிக்க நாகார்ஜுனா இப்போதே தயாராகி வருகிறாராம்.