போலீசிடம் அடிவாங்கிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ்!

ஜெயம்ரவி நடிப்பில் கார்த்திக் தங்கவேல் இயக்கிய கடந்த கிறிஸ்துமஸ் அன்று வெளியான படம் அடங்க மறு. இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக ராசிகண்ணா நடித்திருந்தார். சாம் சி.எஸ். இசையமைத்தார்.

இந்த படத்தின் சக்சஸ் பிரஸ்மீட்டில் பேசிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ், இந்த படத்தின் பிரமோசனுக்காக மதுரைக்கு சென்றபோது ஒரு தியேட்டா¢ல் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அப்போது என்னையும் ரசிகர் என்று நினைத்து ஒரு போலீஸ் அடித்து விட்டார். ஆனால் அதைப்பார்த்தும் டைரக்டர்  தடுக்கவில்லை என்று சொன்னார்.

அதையடுத்து பேசிய டைரக்டர் கார்த்திக் தங்கவேல், போலீசிடம் ஒரு அடி அவர் வாங்கட்டும் என்றுதான் அதை நான் கண்டும் காணாதது போல் இருந்தேன். ஆனால் அதையடுத்து அவர்தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்று சொல்லி போலீசிடமிருந்து சாம் சிஎஸ்ஸை காப்பாற்றி விட்டேன் என்று சொன்னார்.

அதோடு, தான் போலீசிடம் அடிவாங்கியதைகூட அவர் மகிழ்ச்சியாகத்தான் சொல்கிறார். காரணம் இந்த படத்தின் வெற்றி அந்த சோகத்தைகூட சந்தோசமாக மாற்றிவிட்டது என்றார் டைரக்டர் கார்த்திக் தங்கவேல்.