அழுத்தமான சுவடுகளை பதித்த ராட்சசன்  !

தமிழ் சினிமாவில் நல்ல வசூலை பெற்று, அதன் மூலம் அழுத்தமான சுவடுகளை பதித்துள்ளது ‘ராட்சசன்’. இந்த வேளையில் தி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கி, சென்னையில் உள்ள ஒரு பிரிவியூ தியேட்டரில் ‘ராட்சசன்’ படத்தை பார்த்தது படத்துக்கு கூடுதல் மதிப்பை தந்திருக்கிறது. 

“நான் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறேன் என்பதை சொல்லவும் வேண்டுமா?. திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் சினிமாவை பற்றிய நல்ல அறிவை பெற்ற ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். எங்கள் படமான ராட்சசனை பார்க்க ஸ்டாலின் சார் விரும்புகிறார் என்ற தகவல் கிடைத்த உடனே, நான் உடனடியாக என் தயாரிப்பாளர் டில்லி பாபு சாருக்கு இந்த செய்தியை சொன்னேன். அவரும்  மிகவும் உற்சாகமடைந்தார். ஸ்டாலின் சார் மட்டும் படத்தை பார்த்தது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த படக்குழுவையும் பாராட்டினார். இந்த பாராட்டுக்கள் ஒரு நடிகராக ராட்சசன் மாதிரியான நல்ல படங்களை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. பாக்ஸ் ஆபிஸ் வசூலை வைத்து தான் ஒரு படத்தின் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் கிடைத்த பாக்ஸ் ஆபீஸ் விபரங்களை பார்க்கும்போது, ராட்சசன் உடன் வந்த மற்ற நல்ல படங்களை விடவும் கொஞ்சம் உயர்ந்து நிற்கிறது.