ரஜினி பாணிக்கு மாறுகிறார் விஜய்!

ரஜினிகாந்த் ஆரம்பத்தில் காதல், செண்டிமென்ட், ஆக்சன் கதைகளாகத்தான் நடித்து வந்தார். ஒருகட்டத்தில் ஜெயலலிதாவிற்கும் அவருக்குமிடையே மோதல் வெடித்தபோது ரஜினியின் அண்ணாமலை படத்தில் இருந்து அரசியல் புகுந்தது. அதன்பிறகு ரஜினி படங்களில் ஏதோ ஒரு வகையில் அரசியல் சாயம் இருந்து கொண்டே வந்தது. அது காலா வரை தொடர்ந்தது.

இந்த நிலையில், காதல், மோதல் என்று நடித்துக்கொண்டிருந்த விஜய்யின் மெர்சல் படத்தில் அரசியல் கலந்து பெரிய அதிர்வலைகளை சந்தித்தது. நார்மலான கதையில் உருவான அந்த படம் அரசியல் சர்ச்சையினால் மெகா ஹிட்டானது.

இந்நிலையில், தற்போது விஜய் நடித்து வரும் சர்கார் படம் இன்னும் கூடுதலாக அரசியல் பேசப்போகிறது. மெர்சல் படத்தில் மத்திய அரசின் சட்டதிட்டங்கள் குறித்து கருத்து சொன்ன விஜய், இந்த சர்காரில் மத்திய – மாநில அரசுகளை அதிரடியாக அட்டாக் செய்திருக்கிறார். அதனால், இந்த படத்தில் அரசியல் அனல் பறக்கும் என்று தெரிகிறது.

அதோடு நில்லாமல் இந்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். மெர்சல் கொடுத்த ஹிட் காரணமாக மீண்டும் அவருடன் கூட்டணி வைக்கிறார் விஜய்.

மேலும், புதிய படத்தில் மெர்சலை தாண்டிய வசூலை குவித்து விடவேண்டும் என்று திட்டமிட்டுள்ள அட்லி, கூடுதலான அரசியல் காட்சிகளை இணைத்துள்ளாராம். குறிப்பாக, ஊழல் அரசியல்வாதிகளை தோலுரிக்கிறாராம். அதனால், மீண்டும் விஜய்-அட்லி இணையும் படம் படு அமர்க்களமாக இருக்கும் என்று தெரிகிறது.

ஆக, விஜய் படங்களிலும் ரஜினி படங்களைப்போன்று படிப்படியாக அரசியல் அதிகரித்து வருகிறது.