ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `பேட்ட’. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் `விஸ்வாசம்’ படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், ரஜினியும் பொங்கல் ரேசில் இணைந்துள்ளார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி விடுதி காப்பாளர் தாதா வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மதுரையை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.