அட்டகாசமான ‘பேட்ட’ செகண்ட் லுக்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கிவரும் பேட்ட பேட்ட படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் பெரும் வரவேற்புக்கு இடையே வெளியாகியுள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பேட்ட படத்தில், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக்கி, த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்ட நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது. அனிருத் இசையமைக்க, கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். படப்பிடிப்பு கடும் வேகத்தில் பல நகரங்களில் நடந்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சமீபத்தில் வெளியானது. இரண்டாவது லுக் இன்று வெளியிடப்பட்டது. அதில், ரஜினிகாந்த், சிங்கம் சூர்யா போன்ற மீசையுடன் மிக இளமையாக காட்சியளிக்கிறார்.