காவிரி பிரச்சினையை தீர்ப்பாரா ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரில் பேருந்து நடத்துனராக இருந்தவர். அப்போது டிக்கெட்டுகளை கிழித்து கொடுக்கும்போது தனது தலைமுடியை அவர் ஸ்டைலாக கோதி விட்டபடி கொடுப்பதை பார்த்த டைரக்டர் கே.பாலசந்தர், அவரை சென்னைக்கு வரவைத்து நடிகராக்கினார். அதோடு இந்த ஸ்டைலை தொடர்ந்தால் பெரிய நடிகராகி விடலாம் என்றும் அட்வைஸ் செய்து ஒரே நேரத்தில் அவரை மூன்று படங்களக்கு புக் பண்ணினார்.

மேலும், முதலில் வில்லனாக நடித்து வந்த ரஜினி, பின்னர் ஹீரோவாக உயர்ந்தார். ஒருகட்டத்தில் சூப்பர் நடிகரானார். இப்போது 68 வயதான பிறகும் இளவட்ட நடிகைகளுடன் டூயட் பாடி வருகிறார். அதோடு கோடி கோடியாய் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது அரசியலுக்கு வரப்போவதை அறிவித்துள்ளார் ரஜினி, அடுத்த கட்ட அரசியல் பிரவேசம் குறித்து செயல்படத் தொடங்கியிருக்கிறார். மேலும், என்னை வாழ வைத்த தமிழ் மக்களை வாழ வைக்கவே அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொல்லி வருகிறார்.

ஆனால், ரஜினியின் இந்த பேச்சைக்கேட்டு பலவிதமான எதிர் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, அரசியல்வாதிகளுக்கு மத்தியில் நெட்டிசன்களும் ரஜினியை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், வாழ வைத்த தமிழ் மக்களை வாழ வைக்கப்போகிறேன் என்று அவர் சொல்வதை முன்வைத்து சில நெட்டிசன்கள், அந்த எண்ணம் இருந்திருந்தால், தமிழ் சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தில் தமிழ்நாட்டில் தொழிற்சாலை தொடங்கி தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்.

அதை விட்டு விட்டு, கர்நாடகாவில் தொழிற்சாலை தொடங்கி அங்குள்ள மக்களுக்கு வலைவாய்ப்பு கொடுத்துள்ளார் ரஜினி. இவரா தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்க்கை கொடுக்கப்போகிறார் என்கிறர்ரகள்.

அதோடு, ஒருவேளை தமிழ்நாட்டு அரசியலில் அவர் வெற்றி பெற்றாலும், தமிழர்களுக்கு நன்மை செய்ய மாட்டார். இங்கிருந்தபடியே கர்நாடக மககளுக்குத்தான் நல்லது செய்வார்.

இப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்யப்போவதாக சொல்லிக்கொள்ளும் ரஜினி, காவிரி பிரச்சினையை தீர்ப்பதே எனது நோக்கம் என்று அடித்து சொல்ல முடியுமா? என்றும் கேள்விகள் எழுப்பி மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.