ரஜினிகாந்தின் 165வது பட அப்டேட்ஸ்…!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் சூப்பர் ஸ்டார் 165 என்ற பெயரிடாத படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

மேலும் படத்தில் ரஜினிக்கு மகனாக பாபி சிம்ஹா, சனந்த் ஆகியோர் நடிக்க உள்ளனர். சனந்த்துக்கு ஜோடியாக மேகா நடிக்க உள்ளார்.

ரஜினிக்கு ஜோடியாக பிரபல நடிகையான சிம்ரன் நடிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் டேராடூனை அடுத்து மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.