நவம்பரில் 2.ஓ ரிலீசாகுமா?

ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள பிரமாண்ட படம் 2.ஓ. ரஜினியுடன் அக்சய்குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள இந்த படம் ரூ. 500 கோடிக்கு மேலான பட்ஜெட்டில் தயாராகி இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் தயாரான படப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

மேலும், இந்த படம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகி விட்ட நிலையில், 2018 பொங்கலுக்கே இப்படம் வெளியாவதாக கூறப்பட்டது. அதன்பிறகு கோடை விடுமுறை என்றார்கள். இப்போது நவம்பர் 29-ந்தேதி என்று கூறியிருக்கிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் 2.ஓ படத்தின் டீசர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அதனால் நவம்பர் 29-ந்தேதியில் 2.ஓ திரைக்கு வந்து விடும் என்று ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ஆனபோதும், தற்போது இப்படம் குறித்து இன்னொரு பரபரப்பு செய்தியும் கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. அது என்னவென்றால், பேஸ்புக் நிறுவனம் தனி நபர் சம்பந்தப்பட்ட விசயங்களை லீக்அவுட் செய்வதாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 2.ஓ படத்தின் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்டு வந்த அமெரிக்க நிறுவனத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாம். அத னால்தான் படத்தின் அவுட்டை எடுக்க  முடியாத இக்கட்டான நிலையில் லைகா நிறுவனம் சிக்கியுள்ளதாம்.

அதனால் தற்போது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒரு வேளை சட்டச்சிக்கல் முடிவுக்கு வராதபட்சத்தில்  நவம்பரில் 2.ஓ ரிலீஸ் ஆவதும் சந்தேகம் என்கிறார்கள்.