ரஜினியை வாழ்த்திய கமல்!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 2.0 படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது.

இதில் இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், நடிகை ஏமி ஜாக்சன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கலை இயக்குநர் முத்துராஜ், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, சண்டை இயக்குநர் சில்வா உள்ளிட்ட குழுவினர் கலந்துக் கொண்டனர். 

அதில் வீடியோவில் பேசிய கமல், 2.0 குழுவினருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். “இந்த படம் நண்பர் ரஜினியின் வாழ்க்கையில் மிகப்பெரும் மைல் கல்லாக இருக்கும் என அவர் ரசிகர்கள் போல் நானுன் நினைக்கிறேன். ஷங்கரை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என நம்புகிறேன். ஒட்டு மொத்த 2.0 படக்குழுவினருக்கும், எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தனது வாழ்த்துச் செய்தியை உரித்தாக்கியிருக்கிறார் கமல்!