அதிர்ச்சியில்  ரகுல் பிரீத்சிங் !

ரகுல் பிரீத்சிங் ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’, ‘தடையற தாக்க’ படங்களில் தமிழில் நடித்தார். பின்னர் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பட உலகத்துக்கு சென்றார். அங்கு முன்னணி நடிகை ஆனார்.

மீண்டும் தமிழுக்கு வர முயற்சி செய்தார். இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ‘ஸ்பைடர்’ படத்தில் அவருக்கு ஜோடியாகி தமிழுக்கு வந்தார். தொடர்ந்து கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தார்.

அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ஆகியவற்றிலும் ரகுல் பிரீத்சிங் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது விஜய் படத்தில் ரகுல் பிரீத்திசிங் நடிக்கவில்லை.

இதில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். விஜய்யுடன் நடிக்க வந்த வாய்ப்பு கை நழுவி போனதால் ரகுல் பிரீத்சிங் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதேநேரத்தில் செல்வ ராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் சூர்யா 36 படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இருவரும் நடிக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.