ஹாலிவுட் சீரியலில் நடித்தபோது ப்ரியங்கா சோப்ராவுக்கு காயம்!

குவான்டிகோ தொலைக்காட்சி தொடரில் நடிக்கும்போது நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்கள் தவிர்த்து ஹாலிவுட் டிவி தொடரான குவான்டிகோவில் நடித்து வருகிறார். அந்த தொடரில் அவர் எஃப். பி. ஐ. ஏஜென்ட் அலெக்ஸ் பாரிஷாக நடிக்கிறார்.

குவான்டிகோ தொடரின் 3வது சீசனில் நடித்துக் கொண்டிருக்கிறார் ப்ரியங்கா.

குவான்டிகோ தொடரில் நடித்துக் கொண்டிருந்த போது ப்ரியங்கா சோப்ராவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. 3 வாரங்களுக்கு அவர் கட்டுடன் தான்  இருக்க வேண்டுமாம்.

குவான்டிகோ தொடரை இத்தாலியில் ஷூட் செய்தபோது ப்ரியங்கா மட்டும் தான் பெண்ணாம். அப்போது அவர் சீரியல் குழுவுடன் இரவில் வெளியே சென்று பிரபலமான டஸ்கன் ஒயின் அருந்தினாராம். இதை அவரே சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஹாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்த ப்ரியங்கா சோப்ரா இரண்டு ஆண்டுகள் கழித்து பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதுவும் சல்மான் கான் ஜோடியாக பாரத் படத்தில் நடிக்கிறார்.

சல்மான் கானுடன் ஜோடி சேர்ந்து நடிக்க பாலிவுட் நடிகைகள் பலரும் போட்டி போடும் நிலையில் ப்ரியங்கா சோப்ராவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.