பாரிசின் லீ கிராண்டு ரெக்ஸ் தியேட்டரில் விஸ்வரூபம்-2 !

2013ல் இயக்கி நடித்து வெளியான விஸ்வரூபம் படத்தை பாரிஸில் உள்ள லீ கிராண்ட் ரெக்ஸ் தியேட்டரில் வெளியிட திட்டமிட்டிருந்தார் கமல். ஆனால் அந்த சமயத்தில் தமிழ்நாடு அரசு விஸ்வரூபம் படத்திற்கு செய்த தடை காரணமாக விஸ்வரூபம் படத்தை பாரிசில் வெளியிடவில்லை. ஆனால் இம்மாதம் 10-ந்தேதி வெளியாகும் விஸ்வரூபம்-2 படத்தை லீ கிராண்ட் ரெக்ஸ் தியேட்டரில் வெளியிடுகிறார் கமல்.

மேலும், விஸ்வரூபம் படத்தை லி கிராண்டு தியேட்டரில் கமல் வெளியிடாத நிலையில் அதன்பிறகு தமிழில் வெளியான
ரஜினியின் கபாலி, காலா மற்றும் விஜய்யின் மெர்சல் ஆகிய படங்கள் அதே தியேட்டரில் வெளியிடப்பட்டு விட்டன. அந்த வகையில் கமல் படத்துக்கு முன்பே ரஜினி, விஜய் படங்கள் லீ  கிராண்டு ரெக்ஸ் தியேட்டரில் வெளியான நிலையில் தற்போது நான்காவது தமிழ் படமாக விஸ்வரூபம்-2 திரையிடப்பட உள்ளது.