பரியேறும் பெருமாளைத் தொடர்ந்து பா.ரஞ்சித் தயாரிக்கும் படம் !

அட்டகத்தி, மெட்ராஸ் படங்களைத் தொடர்ந்து ரஜினி நடித்த கபாலி, காலா படங்களை இயக்கி பிரபல டைரக்டரானவர் பா.ரஞ்சித். தற்போது அவர் பாலிவுட்டில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய பிர்சா முண்டாவின் வாழ்க்கை கதையை படமாக்கி வருகிறார்.

மேலும், தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் முதல் படமாக பரியேறும் பெருமாள் என்ற படத்தை தயாரித்தார் பா.ரஞ்சித். சாதி பிரச்சினை சம்பந்தப்பட்ட கதையில் உருவான அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தான் இரண்டாவதாக தயாரிக்கும் படத்திற்கு இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்று பெயர் வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தை அதியன் ஆதிரை இயக்குகிறார்.