டைரக்டர்களின் நடிகையான நிவேதா பெத்துராஜ்!

ஒருநாள்கூத்து படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தமிழ்நாட்டு நடிகையான இவர், ஜெயம்ரவியுடன் நடித்த டிக் டிக் டிக் படம் வெற்றி பெற்றதை அடுத்து டைரக்டர்களின் கவனம் நிவேதா பக்கம் திரும்பியிருக்கிறது.

அதோடு தற்போது பிரபுதேவாவுடன் பொன் மாணிக்கவேல், விஜய் ஆண்டனியுடன் திமிறு புடிச்சவன் என சில மெகா படங்களில் நடித்து வரும் நிவேதா, அடுத்தபடியாக மேல்தட்டு ஹீரோக்களை எட்டிப்பிடித்து விடவேண்டும் என்றும் கல்லெறியத் தொடங்கியிருக்கிறார்.

அதன்காரணமாக, இதுவரை மொத்த கதையையும் சீன் பை சீன் கேட்டு படங்களை ஓகே செய்து வந்த நிவேதா பெத்துராஜ், மெகா நடிகர்களின் படங்கள் என்றால், கதையே சொல்ல வேண்டாம். கால்சீட்டை வாரி வழங்க தயாராக இருக்கிறேன் ன்று தன்னை முற்றுகையிடும் டைரக்டர்களிடம் முன்மொழிந்து வருகிறார்.

அதோடு, கவர்ச்சி கட்டுப்பாடு என்பதையும் காற்றில் பறக்க விட்டுள்ள நிவேதா, கதைக்கு தேவையான கவர்ச்சியை வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன் என்றும் சொல்லி டைரக்டர்களின் மனங்கவர்ந்த நடிகையாகியிருக்கிறார்.