விக்னேஷ் சிவனுடன் பிராத்தனை செய்த நயன்தாரா!

சூர்யா தற்போது கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்துள்ளார், மேலும் இந்த படத்தில் கார்த்தி, செந்தில், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

அனிருத் இசையில் உருவாகி இருந்த இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது, இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகமானது.

 

இந்நிலையில் தற்போது நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கோவிலில் சென்று பிராத்தனை செய்துள்ளார், தானா சேர்ந்த கூட்டம் படம் வெற்றி பெற வேண்டி தான் இவர்கள் பிராத்தனை செய்ததாக கூறப்படுகிறது.

 

அங்கு நயன்தாரா ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது, இந்த புகைப்படத்தில் நயன்தாரா சிரித்தபடியும் விக்னேஷ் சிவன் தரையை பார்த்த படியும் போஸ் கொடுத்துள்ளனனர்.