நட்சத்திர ஜன்னல்

திரைப்படங்களை பார்ப்பது எவ்வளவு சுவராஸ்யமோ அதேபோன்றுதான் திரை நட்சத்திரங்களையும், அவர்களை சுற்றி நடப்பதை கேட்டறிவதும். அதை திரை நட்சத்திரங்களிடமே கேட்டறிவது இன்னும் சுவராஸ்யம்.

புதுயுகம் தொலைக்காட்சியில் மக்கள் மனதை கொள்ளை கொண்ட எண்ணற்ற திரைநட்சத்திரங்கள் கலந்து கொண்டு தங்களது திரை அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த வாரம் மக்கள் செல்வன் விஜயசேதுபதி கலந்து கொண்டு தனது தயாரிப்பாளர் அனுபவம் ,தொடர் வெற்றி குறித்து பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியை பாடகர் மற்றும் தொகுப்பாளினி திவ்யா தொகுத்து வழங்குகிறார்.

நமது புதுயுகம் தொலைக்காட்சியில் வரும் ஞாயிறு காலை 11 மணிக்கு காணத்தவறாதீர்கள்.