மோகன்லால் மீது ரம்யா நம்பீசன் குற்றச்சாட்டு!

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைதானவர் நடி கர் திலீப். இவரை மலையாள நடிகர் சங்கத்தில் மீண் டும் சேர்த்துக்கொண்டதால் மலையாள நடிகைகள் போர்க்கொடி பிடித்துள்ளனர். இந்த நிலையில், நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ள நடிகை ரம்யா நம்பீசன், மலையாள நடிகர் சங்க தலைவரான மோகன்லாலை தாக்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், நான் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறியதால் என்னைப்பற்றி தவறான செய்திகள் பரப்பி வருகிறார்கள். அதோடு புதிய படங்கள் கிடைக்கவிடாமல் செய்து என்னை சினிமாவை விட்டே வெளியேற்ற முயற்சித்து வருகிறார்கள்.

மலையாள நடிகர் சங்கத்தில் உள்ள மோகன்லால் உள்பட பலரும் சேர்ந்து கொண்டு தங்களை எதிர்க்கும் நடிகைகளை பீல்டு அவுட் செய்ய முயற்சித்து வருகிறார்கள். குறிப்பாக, என்னைப்பற்றி வதந்திகளையும் அவர்கள் பரப்பி விட்டு வருகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார் ரம்யா நம்பீசன்.