மகேஷ்பாபு ரசிகர்களை இம்ப்ரஸ் செய்த டைட்டீல்!

பாரத் அனே நேனு படத்தில் நடித்த மகேஷ்பாபு தற்போது வம்சி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது மகேஷ்பாபுவின் 25வது படமாகும். அதனால் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

அதோடு இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் மகேஷ்பாபு, அமைதியான, அதிரடியான என இரண்டுவிதமான வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் டைட்டீலை பல மாதங்களாக வெளியிடாமல் படப்பிடிப்பு நடத்தி வந்தவர்கள், ஆகஸ்ட் 8-ந்தேதி அன்று ரிஷி என்று வெளியிட்டுள்ளனர்.

இந்த டைட்டில் மகேஷ்பாபுவின் ரசிகர்களை பெரிய அளவில் இம்ப்ரஸ் செய்து விட்டதை அடுத்து அதை இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.