‘மதுரவீர்ன்’ படத்திற்கு ‘U’ சர்டிஃபிக்கெட்!

சென்னையில் கடந்த ஆண்டு இதே ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் நடந்து ஒரு வருடம் ஆகிற நிலையில் இவ்வருட பொங்கலுக்கு ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘மதுரவீரன்’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது. பி.ஜி.முத்தையா இயக்கத்தில் விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் 12-ஆம் தேதி வெளியாகிறது. பட வெளியீட்டு சம்பந்தமாக நடந்த இப்படத்தின் சென்சார் காட்சியில் ‘மதுரவீர்ன்’ படத்திற்கு எல்லோரும் பார்க்க கூடிய படமாக ‘U’ சர்டிஃபிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து படக்குழுவினர் இப்படத்திற்கான புரொமோஷன் வேலைகளில் படு பிசியாகியுள்ளனர்.

ஷண்முகபாண்டியன் நடிக்கும் இரண்டாவது படமான இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் மீனாக்‌ஷி நடித்துள்ளார். இவர்களுடன் சமுத்திரக்கனி, வேலா ராமமூர்த்தி, ‘மைம்’ கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, பாலசரவணன் முதலானோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.